X

அமெரிக்க அதிபர் தேர்தல் – வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று வெற்றியை நெருங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். தேசிய அளவில் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஜோ பைடன் 50.4 சதவீத வாக்குகளும், டிரம்ப் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் கடும் போட்டி உள்ள வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தார். அதன்படி, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் மாநிலத்தில் வாக்கு எண்ணுவதை நிறுத்தி வைக்கக்கோரி நீதிமன்றத்தில் டிரம்பின் பிரச்சாரக்குழு மனு அளித்திருந்தது.

இந்நிலையில், ஜார்ஜியாவிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறிய டிரம்பின் பிரச்சாரக்குழு, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.