X

அமெரிக்காவில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில்  ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் நேற்று புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர் ஜொனாதன் ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி இறந்தார் என்பது குறித்த உடனடியாக கண்டறிய முடியவில்லை என ப்ரூக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்த மருத்துவமனை வளாகமே ஒரு போர் களம் போல் காட்சி அளித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.