ஆந்திர மாநிலம் எலுரு நகரை சேர்ந்தவர் சயீஷ் வீரா (24). இவர் அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்புபடித்து வந்தார். கொலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வீரா பகுதி நேர வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் வீரா பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அவரை வீரா தடுக்க முயன்றார். அந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வீராவை சுட்டான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய வீராவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரா பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் 10 நாட்களில் பட்டப்படிப்பை முடிக்க உள்ள நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் உயிரிழந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொலையாளியின் புகைப் படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.