உலகம் முழுவதும் 54 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 47 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 975 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 16 லட்சத்து 66 ஆயிரத்து 828 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 231 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 46 ஆயிரத்து 914 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 98 ஆயிரத்து 683 பேர் உயிரிழந்துள்ளனர்.