அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் திடீர் உக்ரைன் பயணம் – அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது. உக்ரைனுக்கு 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உள்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது. உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான மைக் பென்ஸ், உக்ரைனுக்கு திடீரென பயணித்தார். தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடினார். இதுதொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் எதிர்காலம் குறித்தும், இருதரப்பு மக்களிடையேயான தொடர்பு, பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news