X

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே இன்று (உள்ளூர் நேரப்படி புதன் பிற்பகல்) மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் கடற்படை சீருடை அணிந்து இருந்திருந்ததால் கடற்படை வீரராக இருக்கலாம் என தெரிகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கப்பல் கட்டும் தளம் தற்காலிமாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.