அமித்ஷா வீட்டு முன்பு போராட்டம் நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகள் கைது!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் நடந்த 15 மாநிலங்களில் நேற்று 10 மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் வலுத்துவரும் நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி தலைமையில் போராட்டம் நடத்துவதற்காக ஏராளமான பெண்கள் உள்துறை மந்திரி அமித் ஷாவின் வீட்டை நோக்கி பேருந்துகளில் வந்தனர்.

அமித் ஷா வீட்டுக்கு செல்லும் பாதையில் தற்காலிக தடுப்பு வேலிகளை போட்டு போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து சிலர் முன்னேறிச் செல்ல முயன்றனர்.

நிலைமை மேலும் கட்டுப்பாட்டை மீறாமல் தடுக்கும் நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி மற்றும் காங்கிரஸ் மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools