Tamilசெய்திகள்

அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக கண்டனம் – இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.