அமர்நாத் யாத்திரை நிறைவு – 5.10 கட்சம் பேர் தரிசனம்

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடினமான புனிதப் பயணம் மேற்கொள்கின்றனா்.

இந்த ஆண்டு 48 கி.மீ. தொலைவு கொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெற்றது. யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே இரு வழித்தடங்களிலும் பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்காக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, மாநில பேரிடா் நிவாரண மீட்புப் படை, தேசிய நிவாரண மீட்புப் படை, மத்திய ரிசா்வ் காவல் படைகளை உள்ளடக்கிய மீட்புப் படைகள் நிலை நிறுத்தப்பட்டன.

யாத்திரையின் போது உடனடி சிகிச்சை தேவைப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பக்தா்களை மீட்புப் படையினா் மீட்டனா். ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமா்நாத் குகைக் கோவிலுக்கான புனித யாத்திரை நேற்று நிறைவடைந்தது. கடந்த ஜூன் 29-ந் தேதி தொடங்கி 52 நாட்களாக நடைபெற்று வந்த யாத்திரையில் 5.10 லட்சம் பக்தா்கள் குகைக் கோவிலில் தரிசனம் செய்தனா்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools