தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த வருடம் ஜூலை 1 (இன்று) முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பனி லிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாத்திரை மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு முகாமில் இருந்து குழு குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நேற்று அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர மாநில ஆளுநகர் ஜம்மு முகாமில் நேற்று யாத்திரையை தொடங்கி வைத்தார். ஜம்முவில் இருந்து முதல் குழுவாக 3488 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பால்காம் முகாமில் இருந்து சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை தொடங்கியுள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று மத்திய காஷ்மீர் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்தால். மற்றொன்று தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்னாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் ஆகும்.