அமர்நாத் புனித யாத்திரைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது.

அமா்நாத் புனித யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது. இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்காக ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதுதொடா்பாக போலீசார் கூறியதாவது:

ஜம்மு நகாில் உள்ள முகாம்கள் மற்றும் யாத்திரையில் பங்குபெறும் பக்தா்கள் தங்கும் முகாம்களில் போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாதுகாப்பு மிகப்பொிய சவாலாக உள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் டிரோன்கள் மூலம் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

இங்குள்ள பகுதிகளில் 5 பதிவு மையங்கள், 3 டோக்கன் மையங்கள் மற்றும் 32 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமா்நாத் செல்லும் வாகனங்கள் மற்றும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, விரைவு எதிர்வினை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என தொிவித்தாா்.

கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டாக அமா்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools