அமர்நாத் பாத யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1-ந்தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழியாக பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தரகள் பாயத்திரை செல்வார்கள். வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 84,768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இன்று இரண்டு முகாமில் இருந்தும் 17,202 பேர் யாத்திரை மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news