Tamilசினிமா

அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடர்!

சில நேரங்களில் சில மனிதர்கள், நவீன சரஸ்வதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் சொல் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள வெப்தொடர் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’. என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் தொடரில் அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு பர்மா, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகை அபிராமி பேசியதாவது, “நடிகை அபிராமி பேசியதாவது, இந்த மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ5- க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும்.

இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீனேஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்று கூறினார்.