X

அன்று வீதியில், இன்று அணியில் – ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் போட்டோ ஒன்றை அனுப்பி அது எப்போது எடுக்கப்பட்டது என்று ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டிருந்தார். 2011-ம் ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற போது தெருவில் நான் நண்பர்களுடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம் அது. இந்தியா உலக கோப்பை வென்ற அன்றைய இரவு முழுவதும் திருவிழா போல் காணப்பட்டது. தெருவில் ஒரே இரவில் அவ்வளவு மக்களை ஒரு போதும் பார்த்ததில்லை.

அன்று வீதியில் இறங்கி கொண்டாடிய நான் சரியாக 8 ஆண்டுகள் கழித்து இப்போது 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்கிறேன். இவை எல்லாம் கனவு போன்று உள்ளது. அணியின் சக வீரர்கள் எனக்கு சகோதரர்கள்.

கிரிக்கெட்டை ரசித்து அதீத ஆர்வத்துடன் விளையாடக்கூடியவன் நான். சவால்கள் எனக்கு பிடிக்கும். உலக கோப்பை போட்டிக்காக 3½ ஆண்டுகள் தயாராகி இருக்கிறேன். ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எனது கையில் இருக்க வேண்டும். அது தான் இப்போது எனது ஒரே நோக்கம். அதை நினைத்தாலே உடல் சிலிர்த்து விடுகிறது.

இவ்வாறு பாண்ட்யா கூறியுள்ளார்.

Tags: sports news