இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் டுபே 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார். கேப்டன் விராட் கோலி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காமல் 30 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.
ஆனால் ஷிவம் டுபே அளித்த உத்வேகத்தை மற்ற வீரர்கள் சரியாக பயன்படுத்தாததால் இந்தியாவால் 170 ரன்களே அடிக்க முடிந்தது.
மைதானம் மிகப்பெரிய அளவில் இருந்த போதிலும் எளிதாக சிக்சர்கள் விளாசிய அவர், அதுதான் அவருடைய பலம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்தது மிகப்பெரியது. எனக்கு கொஞ்சம் நெருக்கடி இருந்தது. ரோகித் சர்மா என்னிடம் வந்து, உன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்றார், இது என்னை நிதானமாக விளையாட உதவியது.
ஒரு சிக்ஸ் அடித்த பின்னர், நான் உத்வேகத்தை பெற்றேன். அதன்பின் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தேன். எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற எனது திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பேன். அதுதான் என்னுடைய பலம்.
திருவனந்தபுரம் மைதானம் கொஞ்சம் பெரியதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது. அதுதான் என்னுடைய பலம். எப்போது இந்த எண்ணத்தோடுதான் செல்வேன்.
கேட்ச்-ஐ விட்டதுதான் போட்டியின் முக்கியமானது. போட்டியின் ஒரு அங்கம்தான் அது. அவர்களும் சில கேட்ச்களை விட்டனர். நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தார். ஆனால் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். சிறந்த அணி என்பதால் தொடரை வெல்வதற்கான உத்வேகத்திற்கு திரும்புவோம்’’ என்றார்.