Tamilசெய்திகள்

அனைத்து மாநிலம் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *