அனைத்துப் பாடங்களிலும் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆன மாணவர்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தான் பாஸ் ஆக முடியும். எனவே, பாடங்களை படிக்க முடியாமல் திணறும் மாணவர்களை, அந்த 35 மதிப்பெண்கள் பெறும் அளவிற்கு ஆசிரியர்கள் தயார்படுத்துவார்கள். ஆனால், அனைத்து பாடங்களிலும், மிக சரியாக 35 மதிப்பெண்களை ஒரு மாணவன் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளான்.
மும்பை புறநகர்ப்பகுதியான மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த அக்க்ஷித் ஜாதவ் தான் அந்த மாணவன். சாந்தி நகர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த மாணவனைப் பற்றி ஊடங்களில் செய்தி வெளியானதும் ஊரெங்கும் இதே பேச்சுதான்.
இதுபற்றி மாணவனின் தந்தை கூறும்போது, “என் மகன் தனக்கு அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் கிடைத்ததை அறிந்து ஆச்சரியப்பட்டான். அவன் 55 சதவீத மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தான். குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தேர்ச்சி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.