X

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷிட்டி’ படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Tags: tamil cinema