அனுமான் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் – உ.பி. அமைச்சர் லட்சுமிநாராயணன்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் ஒரு தலித் என்று கூறினார். அதே மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.சி. புக்கல் நவாப், அனுமன் ஒரு முஸ்லிம் என்றார். இப்போது அம்மாநில மந்திரி லட்சுமிநாராயண் சவுத்ரியோ அனுமன் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

ஜாட் சமுதாயத்தினர் அனுமனின் சந்ததியர். ராமனின் மனைவி சீதா, ராவணனால் கடத்தப்பட்டார். ஆனால் இலங்கை அனுமனால் கொளுத்தப்பட்டது. சிலர் வேறு சிலருக்கு அநீதி இழைத்தால் 3-வது நபர் அவர்கள் இருவரையும் தெரியாதவராக இருப்பார். யாருக்கு எப்போது அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்கள் தலையிடுவார்கள். இதுதான் ஜாட் சமுதாயத்தினரின் வழக்கம் என்று அவர் விளக்கமும் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools