அனுதாபத்தோடு இந்த பாடலை கேட்க வேண்டாம் – இசையமைப்பாளர் இமான் கோரிக்கை

‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” என்ற பாடலை பாடி சமூக வலைதளங்களில் பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகப்படுத்தி உள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ திரைப்படத்தில், இடம்பெறும் செவ்வந்தி… என தொடங்கும் பாடலை திருமூர்த்தி பாடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பாடலை படக்குழு வெளியிட்டனர்.

திருமூர்த்தி பாடியுள்ள உணர்வுபூர்வமான இந்த பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ ஒன்றை டி.இமான் வெளியிட்டுள்ளார். அதில், அனுதாபத்தால் மட்டும் இந்த பாடலை கேட்க வேண்டாம் என்றும், பாடலும் அவருடைய குரலும் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news