அத்வானியின் உடல் நிலையில் முன்னேற்றம்
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி (வயது 91), ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக அத்வானி அவதிப்பட்டு வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சுதந்திர தின விழாவையொட்டி தனது இல்லத்தில் அத்வானி தேசிய கொடி ஏற்ற மாட்டார் என்றும், கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்றும், அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அத்வானியின் உடல்நிலையில் நேற்று காலை முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் பங்கேற்கும் சுதந்திர தின விழாவில் அத்வானி ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்பது வழக்கம். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று பங்கேற்கவில்லை.