Tamilசெய்திகள்

அத்திரவரதரை இடம் மாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் கடந்த 1-ந்தேதி முதல் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்க உள்ளார். 1-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை அவர் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்.

இது குறித்து கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஒருவர் கூறியதாவது:-

அத்தி வரதர் 24 நாட்கள் அனந்த சயன கோலத்திலும் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் சுவாமியின் சிலை சில இடங்களில் சிதலமடைந்துள்ளதால் நின்ற கோலத்தின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அபூர்வமான இந்த அத்தி வரதர் இன்னும் பல வருடங்கள் கழித்தும் மக்களுக்கு அவரது அருள் கிடைக்க வேண்டி அறநிலையத்துறை மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்துள்ளோம்.

மேலும் தற்போதுள்ள வசந்த மண்டபத்தில் இருந்து வேறு இடத்திற்கு அத்தி வரதரை மாற்றம் செய்ய முடியாது ஏனெனில் ஆகம விதிப்படி வைத்துள்ள அத்தி வரதரை வேறு இடத்திற்கு மாற்றுவது முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *