ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த் மற்றும் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
என்றாலும் அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார். 2-வது போட்டியில் 6-வது விக்கெட்டை வீழ்த்தும்போது 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.
நீல் வாக்னர் 46-வது டெஸ்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹெட்லீ 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
டிரென்ட் போல்ட் 52 டெஸ்ட் போட்டிகளிலும், டிம் சவுத்தி 56 டெஸ்ட் போட்டிகளிலும் 200-வது விக்கெட்டை தொட்டனர்.