அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.