அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பின் போது, மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news