Tamilசெய்திகள்

அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் – வைத்தியலிங்கம் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.