அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி
சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.
இதுகுறித்து நீதிபதிகள் விசாரணை நடத்திய நிலையில், 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும், 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும் ? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதனால் மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.