பா.ம.க.பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கடலூருக்கு வருகை தந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-
கே: அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்தது குறித்து டி.டி.வி. தினகரன் விமர்சித்து பேசி வருகிறாரே?
ப: நான் ஒன்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கே: அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: தற்போது அமைத்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
கே: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததையடுத்து பா.ம.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறதே?
ப: அரசியலில் பல்வேறு விமர்சனங்கள் வரும். அதனை எதிர்கொள்பவன் தான் அரசியல்வாதி. விமர்சனங்களை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.