வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனான கூட்டணியில் இழுபரி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அதிமுக – பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.