அதிமுக பா.ஜ.க உடன் கூட்டணி வைத்தாலும், முறித்து கொண்டாலும் திமுக தான் வெற்றி பெறும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டாலும், முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும். அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. தற்போது பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news