Tamilசெய்திகள்

அதிமுக நிர்வாகிகள் 33 பேர் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை

 

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் தி.மு.க.வுக்கும் சுயேச்சைகளும் ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதனால் ஒரு சில இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 33 நிர்வாகிகளை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏ.ராமச்சந்திரன், எஸ்.தனலட்சுமி, ஆர்.தங்க ராஜ், டி.கருப்பசாமி, எம்.முருகன், எஸ்.நவீன்குமார்,எஸ்.அருண்மொழி, செல்வ லட்சுமி அன்பழகன், கருப்பாணி, சாலைக்கரை முத்தையா, ஏ.தனபால், ஏ.ஜெயராமன், பெருமாள், எஸ்.காதர், எஸ்.சரவணன், கே.போகராஜ், எம்.கோடீஸ்வன், எஸ். சின்னகாளை, ஆர்.ஜெயப்பிரகாஷ், எஸ்.முத்தையா, பி.சீனிநாயுடு, ஆர்.விமல் ராஜ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இதேபோல தேனி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.ராமர், சேரலாதன் உள்பட 33 பேர் அவரது அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.