X

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது – அண்ணாமலை அறிவிப்பு

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதாவின் 8 ஆண்டுகள் ஆட்சியை மத்திய அரசின் மூலமான பயன் அடைந்த பயனாளிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் நடத்துகின்றனர்.

டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதல்-அமைச்சரை எதிர்த்து கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை பாய்கிறது.

மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க உள்ளது. தமிழக காவல்துறை பணிக்கு ஆள்சேர்ப்பதில் அக்னி வீரர் பாணியை கொண்டு வர வேண்டும்.

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது. அ.தி.மு.க. பெரிய கட்சியாக, வலுவான கட்சியாக தமிழகத்தில் உள்ளது.

சீரடிக்கு செல்லும் வழக்கமான ரெயில் சேவை ஏதும் நிறுத்தப்படவில்லை. தற்போது தனியார் ரெயில் சேவையை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இதுதொடர்பாக டி.ஆர். பாலு சொல்லும் குற்றச்சாட்டு தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.