அதிமுக இல்லாமல் தமிழகத்தில் தேசிய கட்சிகள் வெற்றி பெறாது – தம்பிதுரை

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மக்களை சந்தித்து குறை கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களின் உரிமை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும். அதே போல் மாநில சுயாட்சி கொள்கையையும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அ.தி.மு.க.வை மீறி, தேசிய கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. தேசிய கட்சியான காங்கிரஸ் இன்றைக்கு மாநிலக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. அதே போல் பா.ஜ.க.வும் சில மாநிலங்களில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளது.

காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் குடும்ப அரசியல் நடத்துகின்றன. பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கைகள் வெவ்வேறானவை. தமிழகத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலேயே கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இடம்பெற வேண்டும், யாருக்கு எத்தனை தொகுதிகள் வழங்குவது என்பதை அ.தி.மு.க.வே முடிவு செய்யும். அந்த வகையில் தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்கு 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools