அதிமுகவை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்திற்காக “தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்” என்ற வாசகத்துடன் லட்சினையை வெளியிட்டார். AI தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற காணொலியையும் அவர் வெளியிட்டார். அப்போது பழனிசாமி கூறியதாவது:
* தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
* இன்று முதல் இரவு, பகல் பாராது மக்களை சந்தித்து தேர்தல் பணியாற்றுவோம்.
* பாராளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்.
* காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிமுக செயல்பட்டது.
* காவிரி விவகாரத்தில் பாராளுமன்றத்தையே அதிமுக எம்.பி.க்கள் முடக்கினார்கள்.
* மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்ற இயக்கம் அதிமுக.
* அதிமுக வெற்றி பெற்றால், மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.
* மக்களவை தேர்தலுக்காக அதிமுக பிரசாரத்தை தொடங்கி விட்டது.
* “GO BACK” மோடி என்றவர்கள், தற்போது “WELCOME MODI” என்கிறார்கள்.
* நீட் தேர்வு ரத்து என சொன்னார்கள், ஆனால் அதை செய்யவில்லை.
* அதிமுகவை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
* பாராளுமன்ற தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரியே இல்லை என்று கூறினார்.