Tamilசெய்திகள்

அதிபர் மாளிகையில் இருந்து கவுரமாக வெளியேற வேண்டும் – டிரம்புக்கு மருமகன் அறிவுரை

அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க மறுத்து டிரம்ப் பிடிவாதம் காட்டுவது அந்த நாட்டில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் அனைவருமே ஜோபைடன் வெற்றியை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். ஆனாலும் கூட டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுக்கிறார். அவர் அவ்வாறு நடந்து கொள்வது அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு தேர்தல்களில் பல பிரச்சினைனகள் வந்துள்ளன. ஆனால் எந்த அதிபரும் பிடிவாதம் காட்டியதில்லை.

அமெரிக்காவில் பிரபலமான பலரும், சமூக அமைப்பினரும், டிரம்ப் முரண்டு பிடிக்காமல் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் அமைதியான முறையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

டிரம்ப்பின் பிடிவாதத்திற்கு அவரது சொந்த குடும்பத்தில் இருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக அவரது மருமகன் ஹெராடு குல்ஷனர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘டிரம்ப்பின் பிடிவாதத்தை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை. அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.