Tamilசெய்திகள்

அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தீவிர புயலாக வலுவிழந்தாக – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத்  மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கடற்கரை யோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தற்போது தீவிர புயலாக வலுவிழந்தாக  வானிலை மையம் அறிவித்துள்ளது. இது இன்று அதிகாலை நிலவரப்படி போர்பந்தரில் இருந்து தென்மேற்கே 310 கி.மீட்டர் தொலைவிலும், தேவ்பூமி துவார்காவில் இருந்து தென்மேற்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், ஜக்காவ் துறைமுகத்தில் இருந்து தெற்கு, தென்மேற்கே 380 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நாளை மறுதினம் மாலை குஜராத்தில் உள்ள ஜாக்காவ் துறைமுகத்தை கடந்து செல்லும் எனத்  தெரிவித்துள்ளது. பிபோர்ஜோய் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.