அதிகாரிகள் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை – ப.சிதம்பரம் ட்வீட்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம் டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

‘(ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்) நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன்? என்று மக்கள் என்னை கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. (கோப்புகளை) பரிசீலனை செய்து
உங்களுக்கு பரிந்துரைத்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. கடைசியாக கையொப்பமிட்டவர் என்பதால் மட்டுமே உங்களை கைது செய்தனரா? என்னும் மக்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை’ என்று அந்த பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools