அதிகம் சாதித்த மாநிலங்களின் பட்டியல் – முதல் 7 மாநிலங்களில் தமிழகம் இடம்பிடித்துள்ளது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், இந்த தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகமாக சாதித்த மாநிலங்களாக 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற 6 மாநிலங்கள் ஆகும்.
சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. உருவெடுத்து வரும் வர்த்தக மாநிலங்களாக புதுச்சேரி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.