அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இணைந்த பி.வி.சிந்து

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்து உள்ளது.

இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார். அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்கா நாட்டில் பிறந்தவரான எய்லீன் கூ என்ற வீராங்கனை 3வது இடம் பிடித்து உள்ளார்.

இந்நிலையில், 12வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்து கடந்த 2022ம் ஆண்டில் அவருடைய மொத்த வருவாய் ரூ.58 கோடியாக இருந்து உள்ளது. அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் மற்றும் களத்தில் அல்லாமல் வெளியில் இருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools