அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என்று மோடி அரசு நினைத்தால் அது முடியாது – மஹுவா மொய்த்ரா காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அழிவுக்கான ஆரம்பம் இது என பா.ஜ.க.வை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சாடினார்.

இதுதொடர்பாக, மஹுவா மொய்த்ரா கூறுகையில், நெறிமுறைக் குழுவுக்கு டிஸ்மிஸ் அதிகாரம் இல்லை. இது உங்கள் (பாஜக) முடிவின் ஆரம்பம். என்னை வாயை மூடிக்கொண்டு அதானி விவகாரத்தை ஒழித்துவிடலாம் என இந்த மோடி அரசு நினைத்திருந்தால் அது நடக்காது. இந்த கங்காரு நீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் காட்டியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். அதானி உங்களுக்கு முக்கியம். எந்த ஒரு பெண் எம்.பி.யை அடிபணிய வைக்கும்படி நீங்கள் எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news