கைதி படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தம்பி’. இதில் ஜோதிகா, கார்த்திக்கு அக்காவாக நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கார்த்தி பேசும்போது, ‘இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கிறது. ஒவ்வொன்றாக சேர்த்து இந்தப்படத்தை உருவாக்க இரண்டு வருடம் ஆகிவிட்டது. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் வைத்து படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கிறார். எனக்கு பயமா இருந்தது.
ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. நடிச்சது சந்தோஷம்.
சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். கைதிக்கு பிறகு இந்தப்படம் வருவது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி’ என்றார்.