பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினர். மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பெஞ்சமின், பா.வளர்மதி, கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், சத்யா, வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளர் துரைப்பாக்கம் டி.ஜி.கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. ஜெயவரதன், வட சென்னை வழக்கறிஞர் ராயபுரம் பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன் என்ற ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில், மாணவரணி துணை செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், வடபழனி மின்சார சத்ய நாராயமூர்த்தி, ராமலிங்கம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.