X

அண்ணாமலை நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் காவல்துறை அவரது நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. யாத்திரை நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வழங்கிய நோட்டீஸை ஏற்காமல், அறிவிக்கப்படட வழியில் தான் யாத்திரை நடைபெறும் என பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்றுப் பாதையில் அனுமதி வழங்க பா.ஜனதாவுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags: tamil news