அண்ணாமலையின் 2ம் கட்ட பாதயாத்திரை செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கமலாலயத்தில் இன்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை வருகிற 4-ந்தேதி(திங்கட்கிழமை) தென்காசியில் தொடங்குவதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

2-ம் கட்ட யாத்திரை 29-ந்தேதி கோவை சிங்காநல்லூரில் முடிகிறது. மேலும் கூட்டத்தில் சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2021-ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலையை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய பரிசாகும்.

தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து, குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் மோடிக்கு தாய்மார்கள் சார்பில் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news