ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளஇப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.