Tamilசெய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.15-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.