Tamilசெய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழையும், நிகோபார் தீவுகள் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.