X

அடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் பெயர், கொடி பயன்படுத்த தடை

2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஷிய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். வீரர்களுக்கு ரஷியாவே உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் இருந்த தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திற்கு கொடுப்பதற்கு முன், அந்த தகவல்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. அப்போது அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டியில் ரஷியா நாட்டின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டது.

ஊக்கமருந்து அல்லது நேர்மறையான சோதனைகளை மூடிமறைக்கவில்லை என்றால், டோக்கியோ ஒலிம்பிக், 2022 கத்தார் உலக கோப்பையில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

பொதுவான அணி அல்லது பொது வீரர் என்ற அடிப்படையில் ரஷிய வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.