அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விளையாடுவேன் – சுரேஷ் ரெய்னா சூசகம்

ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி நேற்று தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. பஞ்சாப் அணியை வீழ்த்திய நிலையில், 14 போட்டிகளில் 6-ல் வென்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் கடைசி மூன்று போட்டிகளில் வென்றது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அவர் விலகிவிட்டார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா மஞ்சள்தான் வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. தோனியிடம் இன்று இதுதான் கடைசி போட்டியா எனக் கேட்கப்பட்டது போது நிச்சயமாக இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இருவரும் ஒரே மாதிரியான பதிலை கூறியுள்ளார்கள்.

முன்னதாக தோனி போட்டிக்கு பின்ன தெரிவித்த கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று தோனி கூறியுள்ளார். அத்துடன் புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சீனியர் வீரர்களுக்கு அடுத்த ஐ.பி.எல். சீசனில் வாய்ப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools