அடுக்குத் தும்மல், தண்ணீர் வடிவதை ஆயுர்வேதத்தில் பீனசம் என்று சொல்லுகிறோம். இதை இயற்கை முறையில் குணப்படுத்தும் பீனச கஷாயம் பற்றி இப்போது பார்க்கலாம்.
பீனச கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
கோரைக்கிழங்கு சூரணம் 3 கிராம், சித்தாமுட்டி சூரணம் 3 கிராம், நன்னாரி சூரணம் 3 கிராம், அமுக்கரா சூரணம் 3 கிராம்.
செய்முறை:
மேற்கண்ட சூரணங்களை 300 மில்லி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மில்லி தண்ணீராக வற்றியவுடன் இறக்கி வட்டிக்கட்டவும். இதை காலை ஒருவேளை உணவுக்கு முன்பு, இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும்.
சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருக்கிறதா?
சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருக்கிறதா இந்த ஒரு மாத்திரை போதும் என்று விளம்பரங்களில் பார்த்து இருப்பீர்கள்,. அது போலவே பீனச கஷாயம் அருந்தினால் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும். அலர்ஜிக் சைனஸைட்டீஸ் என்று சொல்லுவார்கள், ஒவ்வாமை, அலர்ஜி என்று வந்தால் அடுக்குத் தும்மல் போட்டு, அடுத்து குழாயில் நீர் வடிவது போல மூக்கில் நீர் வடிந்து பின்னர்தான் தும்மல் நிற்கும்.
மூக்கில் தசை வளர்ச்சி!
அதே போல மூக்கில் தசை வளர்ந்து அடைப்பு ஏற்பட்டு தும்மல் வருகிறது என்று சொல்லுவார்கள், தலைவலி பிரச்சனையும் இருக்கும். இவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் தசை வளர்ச்சி நின்றதா என்றால் நின்று இருக்காது. இப்படிப்பட்டவர்கள் இந்த பிரச்னைக்கு பீனச கஷாயத்தை ஒரு இயற்கை மருந்தாக அருந்தி வரலாம், தசை வளர்வது, அலர்ஜி சைனசைடிஸ், பிரச்சைனைகளால் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிவது என்று எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும் பீனச கஷாயம். பீனச கஷாயம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட காரணிகளை மேம்படுத்தி, ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஏசி அறைக்குள் இருந்தால்….
குளிர்காலங்களில் மட்டும் அல்ல, ஏசி அறைக்குள் இருந்தால் தலைவலி, மூக்கடைப்பு, குளிர் பானங்களை அருந்தினால் மூக்கடைப்பு, தலைவலி, இரவு நேரங்ககளில் தும்மல் மூக்கடைப்பு இதனால் வலி வேதனை , நிறமி சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது மூக்கடைப்பு தும்மல், தலைவலி என்று பல விதத்திலும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அருமருந்து இந்த பீனச கஷாயம். இதை குழந்தைகளுக்கு 15 முதல் 30 மிலி வரையிலும், பெரியவர்களுக்கு 100 மிலி அளவுக்கும் கொடுக்கலாம்.
Dr Gowthaman Krishnamoorthy B.A.M.S.,
Medical Director
Shree Varma Ayurveda Hospitals